பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.

பழவேற்காடு பகுதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள், முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் பொதுமக்கள் அலட்சியமாக சென்றனர். ஒருவார காலத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், ஒரு வார காலத்திற்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்க காலையிலிருந்து கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் கேட்காத பட்சத்தில் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!