தூய்மையாக மாறிய ஒரக்காடு ஊராட்சி: அதிகாரி பாராட்டு
வியாசர்பாடி அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி சார்பில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்ப ட்டது ஒரக்காடு ஊராட்சி இந்த ஊராட்சியில் சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி சார்பில் கடந்த ஒரு வார காலமாக நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களை கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் தூய்மைப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சுகாதார ஆய்வாளர் நித்யா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், டெங்கு காய்ச்சல் என பாதிப்புகள் வந்தால் எங்களது சுகாதாரத்துறை கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்யும்போது முதலில் குடிநீர் தொட்டி மற்றும் தண்ணீர் சூழ்ந்த இடங்களை ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டி தண்ணீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்தபோது முழு சுகாதாரமாக இருந்தது பாராட்டுதற்குறியது எனத் தெரிவித்தார். குறுக்கிட்ட மாணவர்கள் குடிநீர் தொட்டி தூய்மையாகவும் எங்கும் தண்ணீர் தேங்காமல் இருந்ததாக கூறினர். எனவே இந்த ஊராட்சி தூய்மையாக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக பள்ளியில் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் நிலா சுரேஷ், துணைத்த லைவர் லட்சுமணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனிவா சன் ஊராட்சி செயலர் ரவி, கல்லூரி முதல்வர் டாக்டர் சுமதி, திட்ட அலுவலர் உமா(அலகு 1) திட்ட அலுவலர் டாக்டர் ரவிச்சந்திரன்(அலகு 2) பேராசிரியர்கள் டாக்டர் மதுரம், டாக்டர் சீனிவாசன், கோகிலா, மீஞ்சூர் கல்லூரி திட்ட அலுவலர் முரளிதரன், முன்னாள் தலைமையாசிரியர் வேலு, சமூக ஆர்வலர் வரதன், முன்னாள் துணைதலைவர் பாபு, முன்னாள் உறுப்பினர் வெங்கடேசன் 100 நாள் பணிபுரியும் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu