விச்சூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
விச்சூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் முதன்மை சுகாதார மையம் திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. விச்சூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஏ.என்.பவுண்டேசன் இணைந்து முதன்மை சுகாதார மையம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கே.டி.விஜயகோ பால்(டி.பி.எல். முழு நேர இயக்குனர் பைனான்ஸ்) டி.செந்தி குமார் (டி.பி.எல்.முழு நேர இயக்குனர் ஆபரேஷன்) என் முருகன் (ஏ.வி.பி. ஆபரேஷன் மற்றும் ப்ராஜெக்ட்) ஆர்.எஸ்.பிரபாகரன் (ஏ.ஜி.எம், எச்.ஆர்.எம்.பி.எல்.) ஆர்.ரகுநாதன் (ஏ.வி.பி.பராமரிப்பு மற்றும் செயல் முறை. டி.பி.எல்.) சிப்ரியன் டி பால் ராஜ் (.ஜி.எம்.ஏ.எம்.பவுண்டேஷன்) திமுக சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஷகிலா சகாதேவன், மருத்துவர்கள் அர்ஜுன், அஸ்வின், அருள்செல்வம், நிஷா, உள்ளிட்டர் பங்கேற்றனர். இந்த மருத்துவமனை மூலம் இலவசமாக சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்கபடுவதுடன் வார நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu