தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு
X
மீஞ்சூர் அருகே தடம்பெரும்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப்பட்டது.
மீஞ்சூர் அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தடப்பெரும்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிடம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர்.

இதனையடுத்து கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் சுமார் ரூபாய் 14.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

இதனை கிருஷ்ணாபுரம் கூட்டு றவு சங்கத் தலைவரும், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளரும், ஒன்றிய கவுன்சில ருமான கிருஷ்ணாபுரம் பி.டி. பானு பிரசாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க பதிவாளர் எஸ்தர் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணைத்தலைவர் சபிதாபாபு, கூட் டுறவு சங்க செயலாளர் அமிர்தலிங்கம்,முன்னாள் தலைவர் நந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .இதனையடுத்து அப் பகுதியிலுள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.




Tags

Next Story
ai based healthcare startups in india