தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நடக்கும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நடக்கும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
X
கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தான் நடக்கும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது கூறியதாவது:-

காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்களால் வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளை ஊக்குவித்து 51%பேர் உயர்கல்வி பயில்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கலைஞர், தளபதி என திராவிட பூமி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் .வேறு கட்சி ஆட்சி செய்ய முடியாது, தேசிய கட்சிகள் ஆட்சி செய்ய முடியாது.திராவிட கட்சி தான் ஆட்சி செய்ய முடியும்.

2026-இல் தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். ஜாதி மத பேதமின்றி திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூரில் சுதந்திரத்திற்கு பின் குடிநீர் இல்லை.முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகே குடிநீர் கிடைத்தது .ஜாதி பிரச்சினைகளை தவிர்த்து சமுதாய நல்லிணக்கத்தோடு செயல்படுத்தி கொண்டிருக்கிறார். பதவிக்கு வருவது எளிது ஆனால் அதை தக்க வைப்பது கஷ்டம்.

இவ்வாறு அவர் பேசினார்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் திமுக அரசு ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்றால் மற்ற கட்சிகள் ஜாதி பாகுபாடு பார்க்கிறதா என்ற கேள்விக்கு, நாம் பாகுபாடு பார்க்கவில்லை என தான் கூறினேன் எனவும் யாரையும் குறை கூறவில்லை என்றும் அனைவரும் ஜாதி பாகுபாடு பார்க்காமல் இருந்தால் தான் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜாதி பாகுபாடு பார்க்காமல் செயல்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினமானது எனவும், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் எனவும் குடிநீர் வரவில்லை என்றால் எம்எல்ஏவை கேட்கமாட்டார்கள் எனவும், எம்பி எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியாது எனவும் கவுன்சிலர்களை தான் கேட்பார்கள் என தெரிவித்தார். லைட் எரியவில்லை என்றால் மந்திரியை திட்டமாட்டார்கள் எனவும், கவுன்சிலர் என்ன செய்கிறார் என்று தான் திட்டுவார்கள் என்றார். உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றி நல்ல பெயர் வாங்குவது அரிதான விஷயம் என்றார்.

உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகளால் தான் கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்றார். உள்ளாட்சி அமைப்புகளால் தான் ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்கும் என்றார். 1986ல் எம்ஜிஆர் நேரடியாக பிரச்சாரம் செய்தும் திமுக உள்ளாட்சியில் வெற்றி பெற்றதாகவும், அதன் பிறகு 1989ல் திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், உள்ளாட்சியில் செயல்படுவதை பார்த்து தான் அந்த கட்சியை மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள் என தெரிவித்தார். திருவள்ளூரில் அரசியல் செய்து விட்டால் ஐ நா சபைக்கு சென்றும் அரசியல் செய்யலாம் என்றார். எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு காரணம் தாய்மார்களை மத்தியில் செல்வாக்கு வர காரணம், அவரது தாயை மதித்தது தான் எனவும், கலைஞர் 1954ல் கட்டிய வீட்டிற்கு தனது தாய் அஞ்சுகம் பெயரை தான் சூட்டினார் எனவும் தாயை மதித்தவர்கள் யாராக இருந்தாலும் பொருளாதாரத்திலும், அரசியலிலும், சமூகத்திலும் நன்றாக வருவார்கள் என தெரிவித்தார்.

இந்தியாவில் கல்வியில் முதலிடம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு எனவும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 42% பெண்கள் வேலைக்கு செல்கின்றனர் எனவும் கல்வி, பாதுகாப்பு தமிழகத்தில் உள்ளது என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதியிடம் பாஜகவும், திமுகவும் வருங்காலத்தில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு இன்று முரசொலியில் வந்துள்ள கார்ட்டூனை பாருங்கள் புரியும் எனவும் ஆளுநரை பாஜக ஒரு கை பிடித்து செயல்படுத்துவது போல கார்ட்டூன் வெளியாகியுள்ளது என்றார். ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாலேயே கூட்டணி என கூறுவது அரசியலில் பக்குவம் இல்லாதவர்கள் பேசுவது எனவும் பேரறிஞர் அண்ணா காமராஜரை அழைத்துச் சென்று விருந்து கொடுத்த மறுநாளே காமராஜரை விமர்சித்து பேசி உள்ளார் என்றார்.

பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு என்பது வாக்கு அரசியலுக்கானது என தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்வது பற்றிய கேள்விக்கு முருகன் மீது தமிழிசைக்கு பக்தி இல்லை என்று அர்த்தம் எனவும், பாஜகவில் சேர்ந்ததற்கு பிறகு திருச்செந்தூர் முருகனை மறந்து விட்டார் எனவும் திருச்செந்தூர் தூத்துக்குடி தொகுதியில் வருவதாகவும் அந்த ஊர் மக்கள் வாக்களிக்காததால் மக்கள் மீதுள்ள கோபத்தை முருகன் மீது தமிழிசை காட்டுவதாக கூறினார்.விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் திமுகவிற்கு பாதிப்பில்லை எனவும் திமுக தேம்ஸ் நதி போன்றது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி. ஆகியோர் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!