1 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது;

1 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவர் கைது;
X
பாடியநல்லூரில் 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்ற 3 நபர்கள் கைது செயய்யப்பட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடிய நல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக சோழவரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சோழவரம் உதவி ஆய்வாளர் ராஜு தலைமையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கஞ்சாவை சிறுசிறு பொட்டலமாக விற்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

தப்பி ஓடிய பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஈஜா, மணிகண்டன், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று நபர்களை மடக்கி பிடித்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!