பொன்னேரி அருகே கர்ப்பிணிளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்

பொன்னேரி அருகே கர்ப்பிணிளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
X

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கும் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர்.

பொன்னேரி அருகே கர்ப்பிணிளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை எம்எல்ஏ வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 192 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களான வெல்லம், ராகி மாவு, கோதுமை மாவு, பச்சைப்பயிறு, வெள்ளை கடலை, கருப்பு கடலை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை கர்ப்பிணி பெண்களுக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பரிக்கிப்பட்டு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ராஜேஷ் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா பங்கேற்றனர்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா வரவேற்புரை நிகழ்த்தினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுஜிதா நன்றியுரை கூறினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் என பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!