பொன்னேரி அருகே அரசு துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட நிறைவு விழா

பொன்னேரி அருகே அரசு துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட நிறைவு விழா
X
பொன்னேரி அருகே அரசு துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
பொன்னேரி அருகே அரசு துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட நிறைவு விழா நடைபெற்றது.

பொன்னேரி அருகே அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் நிறைவு விழாவில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அரசு துவக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் எளிதில் கல்வி கற்கும் வகையிலும், அவர்களது அறிவுத்திறனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையிலும், மழலை குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்கும் விதத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் துவக்கப்பள்ளி மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த கல்வி திட்டம் துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட நிறைவுவிழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட கருங்காலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்ட நிறைவுவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மரியா வாலண்டின் முன்னிலையில் ஆசிரியர்கள் ஷர்மிளா, ஸ்வேதா ஆகியோரின் பயிற்றுவித்தலில் எண்ணும் எழுத்தும் திட்டம் மூலமாக எவ்விதம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது என்பதை பாடல்கள் வாயிலாகவும் நடனம் மூலமாகவும் பெற்றோர்களுக்கு எடுத்து காட்டினர்.

வகுப்பறை முழுவதும் மாணவர்களின் கல்விக்காக வரையப்பட்டிருந்த வண்ண வண்ண ஓவியங்கள் கண்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது. மேலும் ஒவ்வொரு மாணவனும் இத்திட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்திய தனித்திறன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்விழாவில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business