New Sub Registrar Office Boomi Pooja புதிய சார் பதிவாளர் அலுவலகத்திற்கான பூமி பூஜை : அடிக்கல் நாட்டிய ஆவடி எம்எல்ஏ நாசர்

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டிட பூமி பூஜை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் அடிக்கல் நாட்டினார்
.New Sub Registrar Office Boomi Pooja
ஆவடி அருகே பருத்திப்பட்டு ஆர்டிஓ அலுவலகம் வளாகத்தில் புதிய சார் பதிவாளர் கட்டிடம் அமைக்க பூமி பூஜை அடிக்கல் நடும் விழாவை முன்னால் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி நாசர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி துணை ஆணையர் அலுவலகம் அருகில் வாடகை கட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மேலும் பொது மக்களுக்கு வந்து செல்ல மிக அவதிப்படுவதாக அவர்கள் சிம்மத்தை குறைக்கும் வகையில் ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் வளாகத்தில் உள்ள இடத்தில் ரூபாய் 1.67 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான ஆவடி நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 1800.சதுர அடியில் இரண்டு அடுக்குமாடி கட்டிடமாக அமைய உள்ள இந்த கட்டிடத்திற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். பின்னர் இந்த அலுவலக பணிகளை விரைந்து முடித்து மக்கள் சிரமத்தை போக்கும் வகையில் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகராட்சி செயலாளர் சன் பிரகாஷ் ஆவடி பகுதி செயலாளர் கோபிசேகர், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் காமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu