கன்னிகைப்பேர் புதிய அரசு துணை சுகாதார நிலையம்; அமைச்சர்கள் திறப்பு

துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள் சுப்பிரமணியன், நாசர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அரசு துணை சுகாதார நிலையம் திறப்பு விழா மற்றும் மக்களை தேடி மருத்துவத் திட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். எம்எல்ஏக்கள் டி.ஜே. கோவிந்தராஜன், துரை சந்திரசேகரன், மாவட்ட சுகாதாரப் நலப் பணிகளின் துணை இயக்குனர் ஜவஹர்லால் மற்றும் ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஆகியோர் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் 38 மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் 200 கிராமங்களில் மருத்துவ திட்ட முகாமிற்காக தமிழகம் முழுவதும் சென்றுள்ளோம். இத்திட்டம் தற்போது 1,15,840 பேர் பயன்பெற்றுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பேரை சென்றடையும்.
இந்த மருத்துவத் திட்டத்தால் கன்னிகைப்பேர் நீரழிவு நோயாளிகள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று மருந்து வாங்கியவர்கள் இனி கன்னிகைப்பேர் கிராமத்திலேயே மருந்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
முன்னதாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி சாமு நாசர் ஆகியோர் மக்களின் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வீடு வீடாகச் சென்று வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி செயலாளர், சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி துணைத்தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu