நந்தியம்பாக்கம் ஊராட்சியில் திட்டப்பணிகள்: எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

நந்தியம்பாக்கம் ஊராட்சியில் திட்டப்பணிகள்: எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
X

அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட திட்டப்பணிகளை, பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்.

பொன்னேரி அருகே நந்தியம்பாக்கம் ஊராட்சியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது நந்தியம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில், புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கம்ப்யூட்டர் இ சேவை மையம் அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட திட்டப்பணிகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட் டிற்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், துணைத் தலைவர் கலாவதி மனோகரன் வரவேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் எம்எஸ்கேரமேஷ் ராஜ் மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி, மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் நந்தியம் சுரேந்தர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவதானம் லட்சுமி எட்டியப்பன், வஞ்சிவாக்கம் வாணிஸ்ரீ ராஜேஷ்,வேலூர் சசிகுமார், பெரும்பேடு ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்