நான் முதல்வன் உயர்வுக்கு படி! மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி!

நான் முதல்வன் உயர்வுக்கு படி!  மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி!
X
பொன்னேரியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நான் முதல்வன் உயர்வுக்கு படி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு கொண்ட இந்த நிகழ்ச்சியில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் எடப்பாளையம் கோஜன் கல்லூரி,சந்திரபிரபு ஜெயின்கல்லூரி,சைனாவரம் ஸ்ரீதேவி கலைக் கல்லூரி, உள்ளிட்ட தனியார் கல்லூரிகள் பங்கேற்றன.

தங்கள் கல்லூரிகளில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் முகாம் அமைத்திருந்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள், கல்லூரிகளுக்கு சென்று படிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு ஏற்படுத்தியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கல்வியாளர் டி.ஜே.கோவிந்தராஜன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தினர்.

பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் நன்றி கூற மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் இந்த நிகழ்ச்சியில் திரளான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!