முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
பொன்னேரியில் வெகுவிமரிசையாக நடைபெற்ற முத்துமாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் 34.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. பத்து நாட்கள் கோலாகலமாக விழா நடைபெற்று வந்த நிலையில் தீமிதி திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
முன்னதாக மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தீமிதி திருவிழாவுக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் பொருளுதவி செய்த இஸ்லாமிய சகோதரர் முகமது அலி என்பவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமாக
மேளதாளம் முழங்க கரகம் ஏந்தியவர்கள், அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் முதலில் அக்னி குண்டம் இறங்கினர்.இதையடுத்து காப்பு கட்டி விரதமிருந்த 200க்கும் மேற்பட்ட குமாரமக்கள் பயபக்தியுடன் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.விழாவின் நிறைவாக அம்மன் வீதிவுலா நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ராமலிங்கம், சம்பத், தீபன், மணிவண்ணன், சிலம்பரசன், சோமு உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu