சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன்,வள்ளி திருக்கல்யாணம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன்,வள்ளி திருக்கல்யாணம்
X

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உற்சவர் முருகன், வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது.

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகன், வள்ளி திருக்கல்யாணம் நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்ரமணியர் திருக்கோயிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

இன்று சிறுவாபுரி கோவிலில் முருகப்பெருமான் வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு முருகபெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் சாஸ்திர சம்பிரதாயப்படி சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வள்ளி தேவிக்கு ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது. அடுத்து மாலை மாற்றும் வைபவம் நடந்தேறியது. திருக்கல்யாணத்தின் நிறைவாக முருகப்பெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது