சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1கோடியே 2லட்சத்து 6ஆயிரத்து 769ரூபாய்

உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தர்கள்.
Murugan Temple Undi Collection
சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 5 மாதங்களில் ரூபாய் 1 கோடியே 2லட்சத்து 6ஆயிரத்து 760 ரூபாயும், தங்கம் 180கிராமும், வெள்ளி 11கிலோ ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது குறிப்பாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்த முடிந்த பின்னர் செவ்வாய்க்கிழமை நாட்களில், அரசு விடுமுறை நாட்களிலும், முருகனுக்கு உகந்த விழா நாட்களிலும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 1கோடியே 2லட்சத்து 6ஆயிரத்து 769ரூபாயும், தங்கம் 180கிராமும், வெள்ளி 11கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu