சித்த மருத்துவ பிரிவினை எம்.பி. ஜெயக்குமார் ஆய்வு

சித்த மருத்துவ பிரிவினை  எம்.பி. ஜெயக்குமார் ஆய்வு
X
பழவேற்காடு அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவினை எம்.பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்;சில தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி கொள்ளும்படி வலியுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வசிக்கும் 50ஆயிரம் மக்களுக்கான ஒரே ஆதாரமாக விளங்குவது பழவேற்காடு அரசு மருத்துவமனையாகும். கொரோனா அதிகரித்து வரும் சூழலில் இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்க இருக்கும் துரை சந்திரசேகர் ஆகியோர் திடீரென மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனையின் கட்டமைப்பு, சிகிச்சை அளிக்கும் முறைகள் மற்றும் நோய்த் தொற்று குறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டு அறிந்தனர். குறிப்பாக மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவு மருத்துவர் விமலாவிடம் சித்த மருத்துவ பிரிவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சித்த மருத்துவ மருந்துகள் கையிருப்பு மற்றும் சித்த மருத்துவமனை கட்டமைப்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கு சரியான பதில் அளிக்காததால் சில தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளும் படி மருத்துவருக்கு அறிவுரை வழங்கினார்.

இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராணி, பழவேற்காடு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai as the future