பொன்னேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆசிரியர் சாவு

பொன்னேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஆசிரியர் சாவு
X

ஆசிரியர் ராவணன்.

பொன்னேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவெங்கடபுரம் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் ராவணன் (வயது52). இவர் பொன்னேரி அடுத்த வேண்பாக்க த்தில் உள்ள பெண்கள் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி இளைஞர் ஒருவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஆசிரியர் ராவணனின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே ஆசிரியர் ராவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி தலைமை அரசு மருத் துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இருந்தும் போதிய மருத்துவர்கள் போதிய வசதிகள் இல்லாததால் லேசான காயத்துடன் காணப்பட்டவர்களை கூட உடனடியாக மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பதாகவும். சென்னை செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆவதா ல் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!