ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா

ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா
X

திருவள்ளூர் அருகே ஆனந்த காப்பகத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் அருகே ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொன்னேரி அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் அன்னை தெரசா சமூக சேவை அமைப்பு சார்பில் அன்னை தெரசாவின் 112-வது பிறந்த நாள் விழா அமைப்பின் நிறுவனர் அருள்குமார் தலைமையில் நடை பெற்றது. காப்பக மேலாளர் முத்துபாண்டியன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி கோட்டாசியர் காயத்ரி மற்றும் வழக்கறிஞர் திராவிடடில்லி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து அன்னை தெரசாவில் திருஉருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஆனந்த குழந்தைகள் காப்பக இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு போர்வை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். இதடனைத்தொடர்ந்து காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் மதிய சமபந்தி உணவை வழங்கி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினர். இதில் சோழவரம் சரக உதவி ஆய்வாளர் ராஜீவ், சமூக சேவகர்கள் ராஜா, யுவராஜ், ராஜேஷ், நாதன், அருண், முருகானந்தம், அசோக்குமார், பாலாஜி,செந்தமிழ்அரசு, பார்வதி, வனிதா உட்பட பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!