பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் பலி

பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் பலி
X
மீஞ்சூர் அருகே விபத்து நடந்த இடம்.
பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியை சேர்ந்த நிர்மலா தமது மகன் நரேன்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூர் சென்று கொண்டிருந்தார். பட்டமந்திரி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி வேகமாக மோதியது. இதில் தாய், மகன் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரியின் சக்கரம் ஏறி இருசக்கர வாகனம் நொறுங்கியது. கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த தாய் நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகன் நரேன்குமார் மீஞ்சூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் காவல் துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிப்பர் லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!