சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக பணிகளை எம்எல்ஏ ஆய்வு

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேக பணிகளை எம்எல்ஏ ஆய்வு
X

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் ஆய்வு.

பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் அருள்மிகு பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6 செவ்வாய்கிழமைகளில் தொடர்ச்சியாக வந்து இங்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், ஆகம விதிப்படி 2015ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேக பணிகள் திமுக ஆட்சி அமைந்த பிறகு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கோவில் மண்டபத்தில் கற்கள் பதிக்கும் பணிகள், கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள், பக்தர்களுக்கு செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து அப்போது அறநிலையத்துறை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

கோவிலில் புணரமைப்பு பணிகள் 70% முடிவடைந்துள்ள நிலையில் எஞ்சிய பணிகள் சுமார் 3 மாதங்களில் முடிக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் நாள் அறிவிக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் குளம் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சுவாமி தரிசனம் செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!