சர்வதேச சிலம்பப் போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு எம்எல்ஏ நிதி உதவி

சர்வதேச சிலம்பப் போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு எம்எல்ஏ நிதி உதவி
X

சிலம்ப போட்டியில் சர்வதேச அளவில் தேர்வான மாணவிக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் நிதி உதவி வழங்கி பாராட்டிய போது.

பொன்னேரி அருகே சர்வதேச சிலம்ப போட்டிகளுக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு பொன்னேரி எம்எல்ஏ ரூ.25000 நிதி உதவி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சர்வதேச சிலம்ப போட்டியில் தேர்வான பொன்னேரி அருகே காணியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் நிதி உதவி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காணியம்பாக்கம் சேர்ந்த 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி கடந்த சில ஆண்டுகளாக சிலம்ப பயிற்சி பெற்று வருகிறார். பள்ளி, வட்டம், மாவட்டம், மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்ற தர்ஷினி தங்க பதக்கம் வென்று கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்க தேர்வாங்கியுள்ளார். சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்க அரசு பள்ளி மனைவி தேர்வானது குறித்து தகவலறிந்த பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தர்ஷினியை நேரில் சந்தித்து ரூ.25000 நிதி உதவி வழங்கி பாராட்டு தெரிவித்தார். கேரளா சென்று போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தருமாறு மாணவியை எம்எல்ஏ வாழ்த்தினார்.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!