பழவேற்காட்டிற்கு பள்ளிநேரத்தில் பேருந்து இயக்க காங். எம்எல்ஏ கோரிக்கை

பழவேற்காட்டிற்கு பள்ளிநேரத்தில் பேருந்து இயக்க காங். எம்எல்ஏ கோரிக்கை
X

பேருந்து பணிமனையில் கிளை மேலாளரை சந்தித்துவிட்டு வரும் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் 

பழவேற்காட்டிற்கு பள்ளி நேரங்களில் சரிவர பேருந்து இயக்க காங்கிரஸ் எம்எல்ஏ பேருந்து பணிமனைக்கு நேரில் வந்து கோரிக்கை விடுத்தார் .

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பழவேற்காடு பகுதி. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கு செல்வது, பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி செல்வது உள்ளிட்டவைக்கு பேருந்துகளை நம்பியிருக்கின்றனர். இந்நிலையில் காலை மாலை வேளைகளில் பேருந்துகள் சரிவர இயங்காததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பழவேற்காடு திமுக நிர்வாகிகள் பலரிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் திமுக ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஆகியோர் ஒன்றாக பொன்னேரி செங்குன்றம் சாலையில் உள்ள பேருந்து பணிமனைக்கு நேரில் வந்து கிளை மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அப்பொழுது கிளை மேலாளர் தங்களுக்கு இருக்கும் சில பாதிப்புகள் குறித்து தெரிவித்தார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இது தொட ர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் பொன்னேரி பேருந்து பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!