உடற்பயிற்சி பூங்கா பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

உடற்பயிற்சி பூங்கா பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

உடற்பயிற்சி பூங்கா பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

சென்னை பெருநரக வளர்ச்சி குழுமம் சார்ரபில் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூரில் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.


உடற்பயிற்சி பூங்கா எவ்வாறு அமையப்பட உள்ளது என்பது குறித்த வரைபட விளக்கத்துடன் சிஎம்டிஏ அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டு அறிந்தார். உடற்பயிற்சி பூங்காவில் மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள், அதில் நிறுவப்படவுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் அப்போது அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். இந்த ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், சிஎம்டிஏ அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story