சூரப்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

சூரப்பட்டு  அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
X

சூரப்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு  செய்த காட்சி

சூரப்பட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மைய வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனாவின் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு படுக்கை வசதிகளை அதிகப்படுத்திக் வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மாதவரம் தொகுதிக்குட்பட்ட சூரப்பட்டு பகுதிக்குச் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள 180 கொரோனா படுக்கை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதில் புதிதாக ஆக்சிஜன் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அப்பகுதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவருடன் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!