மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
X

மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மீஞ்சூர் ஒன்றிய கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளைஅரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் ஏலியம்பேடு ஊரட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆலோசனை கூட்டத்தில் மீஞ்சூர் ஒன்றிய கழகத்தை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். பூத் கமிட்டி உறுப்பினருக்கு பூத் வாரியாக உறுப்பினர் படிவம் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. அப்போது பேசிய திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தி.மு.க. ஆட்சியின் 520 வாக்குறுதி ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் அரைகுறையாக ஆட்சி செய்யும் பொம்மை முதலமைச்சரை வெளியேற்றி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைக்க வழி வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் முத்துக்குமார் விவசாய பிரிவு செயலாளர் ஆறுமுகம் ஏலியம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா சிவகுமார், சோம்பட்டு தலைவர் ராஜாராம்,துணை தலைவர் லோகநாதன், ஏலியம்பேடு சிவா,பன்னீர், வழக்கறிஞர் காட்டாவூர் டேவிட்,ரவி,கிளிக்கோடி பார்த்திபன்,முன்னால் கவுன்சிலர் திருமலை , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture