அத்திப்பேடு ஊராட்சியில் மருத்துவ முகாம், மின்மாற்றி துவக்கவிழா

அத்திப்பேடு ஊராட்சியில் மருத்துவ முகாம், மின்மாற்றி துவக்கவிழா
X

பொது மருத்துவ முகாம் மற்றும் மின்மாற்றி துவக்க விழா.

அத்திபேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் மற்றும் புதிய மின்மாற்றி துவக்கவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அத்திபேடு ஊராட்சி. இந்த ஊராட்சியில் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையான எம்எம்ஆர்வி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பின்னர் அதே பகுதியில் மின் பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் அத்திப்பேடு ரமேஷிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை எம்எல்ஏ சேர்மேனிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர் இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், சோழவரம் ஒன்றிய சேர்மன் ராஜாத்தி செல்வசேகரன், மாவட்ட பொறுப்பு க்குழு உறுப்பினர் கோளூர் கதிரவன், ஒன்றிய செயலாளர் செல்வ சேகரன் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன்,காங்கிரஸ் கட்சி மாநில விவசாய அணி செயலாளர் தயாளன், ஊராட்சி மன்ற தலைவர் அத்திப்பேடு ரமேஷ்,எம்எம் ஆர்.வி.ஹாஸ்பிடல் மருத்துவர்கள் ராஜ் குமார் (பிளாஸ்டிக்சர்ஜன்) விஜய சங்கரி(கண்மருத்துவம்) பாரூக் (பொதுமருத்துவம்) மேனேஜர் ஜான், மார்கெட்டிங் மேனேஜர் தேவேந்திரன் துணைத் தலைவர் மோகன் உறுப்பினர்கள் மோகனா ரவி, நாகலட்சுமி ஐயப்பன், யுவராஜ், கணபதி,பவானி தனசேகரன், ராம ச்சந்திரன், கீதா கதிரவன், மோகன், வித்யாதமிழரசன், ஊராட்சி செய லர் முத்துக்குமார், செவிலியர் நவித்தா, சவித்தா, மோனிஷா அட் மிடேஷன் சீதாலட்சுமி, பிரசாந்த், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக புதிய மின்மாற்றி துவக்கி வைக்கப்பட்டது .இது 100 கே. வி.ஏ.கொண்டதாகும். இதில் உதவி பொறியாளர் சரவணன் (பொறுப்பு ) மற்றும் மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!