குடிபோதையில் வந்த தகராறு! வாலிபர் பலி!

குடிபோதையில் வந்த தகராறு! வாலிபர் பலி!
X

மீஞ்சூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு வாலிபர் ஒருவர் பலி

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார்.(32) மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 27.ஆம் தேதி அன்று பட்ட மந்திரி என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபான மது வாங்கி அருகில் மது அருந்தி கொண்டிருந்தார். இந்த நிலையில் மேலூரை தகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரும் மது வாங்கி அருந்தி கொண்டிருந்தார்.

குடிபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒரு நிலையில் கைகலப்பாக மாறி உள்ளது. இதனை அடுத்து விக்னேஷ் அருகில் இருந்த கல்லை எடுத்து சாந்தகுமார் முகம், மற்றும் தலை பகுதியில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் சாந்தகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்துக் கொண்டிருந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி அனுப்பி வைக்க அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாந்தகுமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் உயிர் இழந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற விக்னேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்