டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழப்பு! பொன்னேரி அருகே பரபரப்பு!

டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழப்பு! பொன்னேரி அருகே பரபரப்பு!
X
பொன்னேரி அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பொன்னேரி அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநில தொழிலாளி உயிரிழப்பு. சடலத்தைக் கைப்பற்றி பொன்னேரி போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த. சின்னக்காவனம் பகுதியில் நெல் நாற்று நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநில தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரத்தையா (45) என்ற தொழிலாளி நாற்றுக்களை பிடுங்கி டிராக்டரில் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரை அதன் ஓட்டுநர் இயக்கியதால் தொழிலாளி ரத்தையா படுகாயமடைந்தார். அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த ரத்தையா சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக சவ கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநில தொழிலாளி டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story
ai solutions for small business