வழுதிகைமேடு பகுதியில் காவலாளியின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவர் அடித்துக்கொலை
பைல் படம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வழுதிகைமேடு ஏரிக்கரையில் மீன் பண்ணைகள் உள்ளன. இங்கு காவலாளியாக குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் உள்ளார்.
இவர் மனைவி சரஸ்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சரஸ்வதி உடன் ஏரிக்கரையில் குமார் வசித்து வருகிறார். நேற்றிரவு அவர்களது வீட்டு முன்பு வாலிபர் ஒருவர் வந்திருந்தார்.
அவரிடம் சரஸ்வதி விசாரித்தார். திடீரென அந்த வாலிபர் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வந்த குமார் அந்த வாலிபரிடம் மோதலில் ஈடுபட்டார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டிச் சென்று குமார் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த மீஞ்சூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவருக்கு சுமார் (40), இந்தி பேசி உள்ளார். எனவே அவர் வட மாநிலத்தை சேர்ந்தவரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே வாலிபர் மீஞ்சூரை அடுத்த கல்ப்பாக்கம் பகுதியிலும் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது மக்கள் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக குமாரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu