மீஞ்சூர் பஜாரில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது

மீஞ்சூர் பஜாரில்  இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது
X

பைல் படம்

மீஞ்சூர் பஜாரில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அரியன்வாயில் பகுதியை சேர்ந்தவர் ஆசான் பாஷா (21) என்பவர் நேற்று காலை 6.30 மணியளவில் மீஞ்சூர் பஜாரில் உள்ள ரகுமான் புல்லா கறிக்கடையின் பின்புறம் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மீண்டும் வாகனத்தை எடுக்கலாம் என்று இரவு 7.30 மணிக்கு வந்த பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

அனைத்து இடங்களிலும் தேடி வந்த நிலையில் கேசவபுரம் அருகே முட்புதரில் வாகனத்துடன் நின்றிருந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

வாகனத்தை திருடிய நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ரூபன் (எ) அப்பு என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு