மாதவரம்: வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை: எம்எல்ஏ துரை. சந்திரசேகர் ஆய்வு!

மாதவரம்: வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை: எம்எல்ஏ துரை. சந்திரசேகர் ஆய்வு!
X
மாதவரத்தில் நடைபெற்ற உடல் வெப்ப பரிசோதனையை துரை.சந்திரசேகர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.
மாதவரம் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் பொன்னேரியை அடுத்த மாதவரம் ஊராட்சியில் சுகாதார பணியாளர்கள், வீடுவீடாக சென்று மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் காய்ச்சல், இருமல், சளி உள்ளதா என்பதை பரிசோதித்து வருகின்றனர்.

இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் திடீரென ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், முக கவசம் அணிந்து கொள்ளவும் வலியுறுத்தினார்.

உடன் சோழவரம் ஒன்றிய சேர்மன் ராஜாஜி செல்வசேகரன், ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரம், ஊராட்சி தலைவர்கள் பிரியா ஆனந்தன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!