பொன்னேரி அருகே நின்றிருந்த லாரி டூவீலர் மோதி விபத்து சிறுமி பலி :போலீசார் விசாரணை

Lorry Two Wheeler Dashed Accident பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே சாலையில் நின்றிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு தாய் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே நின்றிருந்த லாரி டூவீலர் மோதி விபத்து சிறுமி பலி :போலீசார் விசாரணை
X

Lorry Two Wheeler Dashed Accident

மீஞ்சூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 4வயது சிறுமி பலி. காயங்களுடன் தாய், மற்றொரு குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காளீஸ்வரி. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமது தாயை சந்திப்பதற்காக காளீஸ்வரி தனது(6வயது மகன் கவின்), (4வயது மகள் எக்ஸ்ரா செல்லம்). ஆகிய இருவருடன் இருசக்கர வாகனத்தில் திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அத்திப்பட்டு புதுநகர் சாண்டி கோவில் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக பலமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த 4வயது சிறுமி எக்ஸ்ரா செல்லம் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் துடித்து விட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தாய் காளீஸ்வரி, மகன் கவின் ஆகியோர் காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்ட நிலையில் இருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழந்த 4 வயது சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 13 Feb 2024 4:45 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
 2. தமிழ்நாடு
  நாளை முதல் தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்
 3. அரசியல்
  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
 4. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...
 5. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 6. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!
 7. லைஃப்ஸ்டைல்
  Funny Food Quotes In Tamil உணவுக்கு முன் பசியுடன் இருப்பதை விட ...
 8. வீடியோ
  EPS-ஐ ஓட ஓட விரட்ட வேண்டும் | தொண்டர்களுக்கு உத்தரவுபோட்ட OPS |...
 9. வீடியோ
  MGR வகுத்த சட்டவிதிகள் ! மாற்றியமைத்த பழனிசாமி !#ops #OPS #OPSspeech...
 10. நாமக்கல்
  ரூ. 57.22 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ராஜேஷ்குமார்...