பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவபெருமான்- பார்வதி திருக்கல்யாணம்

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவபெருமான்- பார்வதி திருக்கல்யாணம்
X

திருக்கல்யாண கோலத்தில் சிவன்- பார்வதி

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெடுவரம்பாக்கம் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடந்த சிவபெருமான்- பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் கண்ணாற கண்டு களித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது.வட அண்ணாமலை என போற்றப்படும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் -பார்வதி திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையாருக்கும் அபிதகுஜாம்பாள் தாயாருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதையடுத்து கிராமதேவதை சாந்தவள்ளியம்மன் கோவிலிலிருந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சீர்வரிசை பொருட்களை நுற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.


இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தேறியது. பின்னர் கெட்டிமேளம் முழங்க பார்வதிதேவிக்கும் கௌரி தாயாருக்கும் ஆகம முறைப்படி மங்கலநாண் சூட்டப்பட்டது.இத்திருமண காட்சியை அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்குளிர கண்டு மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து உள்ளிட்ட நறுமண திரவியங்களை கொண்டு யாகம் வார்க்கப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்றது.

முன்னதாக பால்,பயிர்,சந்தனம், இளநீர்,ஜவ்வாது,மஞ்சள், குங்குமம்,திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் உண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பட்டு உடைகளாலும், திரு ஆபரணங்களாலும், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

திருக்கல்யாணத்தின் நிறைவாக சிவபெருமானுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மங்களநான் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
வீட்டுக்குள்ள இப்படி நடந்தாலே எடை குறைஞ்சு ஹெல்தியா இருப்பீங்களாமே.. அப்படி என்னதான் பண்ணனும் பாக்கலாமா...?