மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து கோவில்களில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

மீஞ்சூர் அருகே  அடுத்தடுத்து கோவில்களில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
X
மீஞ்சூர் அருகே இரண்டு கோவில்களில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை குறித்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.இதே போல சாய் பாபா ஆலயம் அமைந்துள்ளது.

இந்த இரண்டு ஆலயங்களிலும் நேற்று பூஜைகளை முடித்து வழக்கம் போல பூட்டிவிட்டு இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் அடுத்தடுத்த 2கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி