ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

Arani New Bus Stand
Arani New Bus Stand-திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆரணி பேரூராட்சி. இங்குள்ள 15 வார்டுகளில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இங்கு இரண்டு வங்கிகள். சார் பதிவாளர் அலுவலகம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தபால் நிலையம், பி எஸ் என் எல் அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன
இங்குள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு கிராமங்களை சார்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் நெசவு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு நேய்க்கும் புடவைகள் நூல் துணிகளை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு விற்பனை செய்து வருவார்கள்.
இது மட்டுமல்லாமல் ஆரணி சுற்றி மல்லியின் குப்பம், திருநிலை, மங்கலம், காரணி,புதுப்பாளையம், கொள்ளு மேடு, அமிதா நல்லூர்,சிறுவாபுரி, அகரம், கொசவன் பேட்டை, உள்ளிட்ட 20.க்கு மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் விவசாயம் நம்பி தான் வாய்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் மக்கள் விளைவிக்கும் காய்கனிகள், வகைகள், பூக்கள் உள்ளிட்டவை விவசாயம் செய்து அவற்றை அறுவடை செய்து சென்னை, கோயம்பேடு, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வருவார்கள்.
இவ்வாறு வியாபார மையமாக உள்ள இந்த ஆரணி பேரூராட்சியில் 123 ஆண்டு காலமாக பேருந்து நிலையம் இல்லை. இது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால், மழைக்காலங்களில் வெயிலில் சாலை ஓர கடைகளின் கூரையின் கீழ் நின்று பயணம் செய்து வருகின்றனர்.
சாலை ஓரை கடைகளில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் சிலர் கட்டி இருப்பதால், சாலை குறுகியதாக உள்ளது. இங்கு வந்து செல்லும் பேருந்துகள் ஆரணி காவல் நிலையம் எதிரே சாலை ஓரத்திலே நிற்பதால் சில நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறைக்கும் அரசாங்கத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேரூராட்சி மன்ற நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தும்.எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
எனவே வளர்ந்து வரும் ஆரணி பகுதியில் தற்போதாவது பயணிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலனை கருதி ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையத்தை அமைத்து தர வேண்டும் என்று அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu