மீஞ்சூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பைல் படம்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் அரியன் வாயில் பகுதியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயில் பகுதியில் ஏற்படும் தொடர் போக்குவரத்து நெரிச்சல் தொடர்ந்து ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பேருந்து ஆட்டோ நிறுத்தம் மாற்றம் செய்ய திருப்பதி நகரில் செயல்படும் மதுபான கடையை அகற்றிட வேண்டும். அரியன் வாயில் பகுதியில் உதவி காவல் மையம் ஒன்று அமைத்திட வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அரியன் வாயில் முகாம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீஞ்சூர் பேரூராட்சியின் இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபூபக்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொன்னேரி தொகுதி துணை செயலாளர் சிவராஜ், ஒன்றிய செயலாளர் வாசு, பொன்னேரி நகர செயலாளர் மதன் வழக்கறிஞர் தென்னரசு மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளும் கண்டித்து பேசினார்.
பின்னர் கோஷங்களையும் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தில் அரியன் வாயில் முகாம் நிர்வாகிகள் அஷ்ரப், ஃபரூக், அசாருதீன், பஷீர், முபின் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இஸ்லாமிய சரணாக பேரவை துணை அமைப்பாளர் அசாருதீன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu