பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, பொன்னேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று கூடி தங்களது கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் வழக்கறிஞர்கள் தெரு விக்கையில் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியினை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும், வழக்காடிகளும் தங்களது வழக்கின் விசாரணை உள்ளிட்ட அனைத்து விவரங்களை அவர்கள் தெரிந்து புரிந்து கொள்ள வகையில் தமிழ் மொழியினை வழக்காடு மொழியாக அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தினர். கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசும், நீதித்துறையும் அங்கீகரித்திட வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். வழக்காடிகளுக்கு தாய் மொழியிலேயே நீதியை வழங்கிட வேண்டும் எனவும் அப்போது கோரிக்கை வைத்தனர்.

Next Story
ai solutions for small business