நெற்குன்றம் ஊராட்சியில் திட்டப்பணிகள் துவக்கிவைப்பு: மகளிர்களுக்கு கடனுதவி

நெற்குன்றம் ஊராட்சியில் திட்டப்பணிகள் துவக்கிவைப்பு: மகளிர்களுக்கு கடனுதவி
X

நெற்குன்றத்தில் மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

நெற்குன்றம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணியினை திறந்து வைத்தல் மற்றும் மகளிர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்குன்றம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் ரூ.5.25 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஊராட்சிக்குட்பட்ட வேட்டைக்காரன்பாளையம் உள்ளிட்ட இரு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் அழிஞ்சிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் ஆடு வளர்ப்பு மற்றும் கறவை மாடு பராமரிப்புக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது. அதன்படி ஆடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு கடன் 5 பயனாளிகளுக்கு ரூ.2.70 லட்சமும், கறவை மாடு வளர்ப்பு பராமரிப்பு கடனாக 47 நபர்களுக்கு 41 லட்சத்து 14 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

பின்னர் ரூ.1.50 லட்சத்தில் தானியங்கி பால் பகுப்பாய்வு கருவி உள்ளிட்ட பணிகள் துவக்கி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அதே பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனன், சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மீவே கருணாகரன் மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் தயாளன், சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரி குலசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் நெற்குன்றம் பாபு மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கருணாகரன் அழிஞ்சி வாக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் வங்கி செயலாளர் செல்வகுமார், எழுத்தர் தியாக ராஜன், பால் பத துறை துணை உதவியாளர் ஜோஸ்பின் ஜெபஸ்டின், முதன்மை ஆய்வாளர் மதன், விரிவாக்க அலுவலர் சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!