சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளை  கும்பாபிஷேகம்
X

 சிறுவாபுரி முருகன் கோவில்.

Sri Murugan Temple - சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

Sri Murugan Temple -திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி அமைந்துள்ளது புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில். இக்கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இக்கோவிலில் ஆறு செவ்வாய்க்கிழமை நாட்களில் கோவில் சுற்றி வளம் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத வேண்டுதல் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இக்கோவிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 16ஆம் தேதி அன்று ஆலய வளாகத்தில் கோ பூஜை கணபதி ஹோமம் நவக்கிரக தன் பூஜை உள்ளிட்ட யாகசாலைகள் நடைபெற்றது.

இதனையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் பல்வேறு யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நாளை காலை 9 முதல் 10:30 மணி அளவில் மூலவர் மற்றும் ராஜகோபுரம் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆலயம் சார்பில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே. கோவிந்தராஜன், துரை சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா