பொன்னேரி அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா

பொன்னேரி அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா
X

விடிஞ்சான் மேடு, விஜயராகவ வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாட்டியாஞ்சலி  நடைபெற்றது.

பொன்னேரி, விடிஞ்சான் மேடு பகுதியில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,பொழுது விடிஞ்சான் மேடு அருள்மிகு விஜயராகவ வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வெள்ளகுளம் அடுத்த பொழுது விடிஞ்சான் மேடு, அருள்மிகு ஸ்ரீ விஜயராகவ வைகுண்ட பெருமாள் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் உற்சவர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருமஞ்சனம் ஆராதனைகளும் நடைபெற்றது. சுவாமி ஊஞ்சல் உற்சவத்தின் ஒரு பகுதியாக பொன்னேரி அபிநயா நாட்டிய கலைக் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது . நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக தசாவதார நாட்டியம் நாட்டையாஞ்சலி மாணவர்களால் நேர்த்தியான முறையில் அனைவரின் கண் கவரும் விதத்தில் செய்து காண்பிக்கப்பட்டது.

ஆலய பட்டாச்சாரியா திரு சதீசன் வெங்கட்சாமி ருக்மணி நாட்டிய நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து சுவாமியினை வழிபட்டு, நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Next Story
business impact of ai