பொன்னேரி அருகே காட்டூரில் கொடுவா மீன் அறுவடைத் திருவிழா

பொன்னேரி அடுத்த காட்டூரில் கொடுவா மீன் அறுவடைத் திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தும் விதத்தில் இயற்கை முறையில் மீன் வளர்க்க ஐ.சி.ஏ.ஆர்-சிபா திட்டத்தில் காட்டூர் இருளர் பழங்குடி குடும்பங்களை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக இணைத்து இக்குழுவிற்கு சிந்தாமணி ஈஸ்வரர் பழங்குடி குடும்பங்கள் குழு என்று பெயர் சூட்டி இவர்களை பங்காளர்களாக தேர்ந்தெடுத்து பண்ணை அமைத்து சிறு தொழில் செய்யும் பொருட்டு கொடுவா மீன் வளர்த்து வருகின்றனர்.
இதன் வளர்ப்பு காலம் முடிந்து இதற்கான மீன் அறுவடை திருவிழா நடைபெற்று விற்பனையும் நடைபெற்றது. இதற்கான விழாவில் ஐ.சி.ஏ.ஆர்-சிபா திட்டத்தின் தலைவியும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர்.சாந்தி தலைமை வகித்தார்.இத்திட்டத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் டி.செந்தில் முருகன்,காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் துணைத் தலைவர் ரேவதி,ஊராட்சி செயலர் சந்திரபாபு,கல்வியாளர் உமா சங்கர் மற்றும் பழங்குடி கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu