கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மீஞ்சூரில் மாரத்தான் போட்டி

கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மீஞ்சூரில் மாரத்தான் போட்டி
X

மீஞ்சூர் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டியை கோவிந்தராஜ் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

மீஞ்சூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மாரத்தான் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் தலைமை வகித்தார், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காட்டுப்பள்ளி சேதுராமன், திருவெள்ளைவாயல் முத்து,வாயலூர் கோபி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பாண்டுரங்கன் ,தன்சிங் ,ஸ்டாலின், முனுசாமி ,குமார், குணாளன், பார்த்தசாரதி, மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் தத்தமஞ்சி கிராமத்தில் வந்துமுடைந்தது.

போட்டிகளில் முதல் ஆறு இடங்களை பிடித்த இளைஞர்கள் ஹரி ,ஜனார்த்தனன், சந்துரு, நந்தகுமார், ஆறுமுகசாமி, ஜனா ஆகியோர்களுக்கு மாவட்ட செயலாளர் சிறப்பு பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு காட்டூர் காவல் நிலைய போலீசார் சிறப்புடன் பாதுகாப்பு அளித்து,காட்டூர் மருத்துவத்துறையினர் உறுதுணையாக இருந்தனர்.

மேலும் காட்டூர்,திருவெள்ளைவாயல், பகுதிகளில் கழக கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். இதில் திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare