கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா: சிம்ம வாகனத்தில் எம்பெருமான்

கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா:  சிம்ம வாகனத்தில் எம்பெருமான்
X

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முதல்நாளில் எம்பெருமான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முதல்நாளில் எம்பெருமான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சவுந்தரவள்ளி சமேத கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.பரத்வாஜ முனிவர் இத்தலத்திற்கு வருகை தந்து பெருமாளை போற்றிப்பாடியதாக வரலாறு கூறுகிறது.

வரலாற்று சிறப்புவாய்ந்த இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை தொடர்ந்து சிம்ம வாகன வீதிவுலா நடைபெற்றது. முன்னதாக கரிகிருஷ்ண பெருமாளுக்கும் சவுந்தரவள்ளி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர், தேன், பன்னீர், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க எம்பெருமான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ ஆலய உலா வந்தார். இதனை தொடர்ந்து சிம்ம வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக எம்பெருமான் எழுந்தருளி ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா