பொன்னேரியில் பாஜக சார்பில் கார்கில் போர் வெற்றி விழா கொண்டாட்டம்

பொன்னேரியில் பாஜக சார்பில் கார்கில் போர் வெற்றி விழா கொண்டாட்டம்
X

பொன்னேரியில் பாஜக சார்பில் கார்கில் போர் வெற்றி விழா கொண்டாட்டத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பொன்னேரியில் பாஜக சார்பில் கார்கில் போர் வெற்றி விழாவை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொன்னேரியில் பாஜக சார்பில் கார்கில் போர் வெற்றி விழா நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,

கடந்த 1999- ஆம் ஆண்டு மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இருந்தபோது, பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 25-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாஜக இளைஞரணி செயலாளர் ரஜினி ஏற்பாட்டில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றி தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு அங்குள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்களை போற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் வீர முழக்க கோஷங்களை பாஜகவினர் எழுப்பினர், இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கி தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆலய மேம்பாட்டு ஆன்மிக பிரிவு மாநில தலைவர் குமார், அன்பாலயா சிவகுமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு