கன்னிகாபுரம் தடுப்பூசி முகாம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்!

கன்னிகாபுரம் தடுப்பூசி முகாம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்!
X

கன்னிகாபுரம் கொரோனா தடுப்பூசி முகாமை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

கன்னிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை ஆ. கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சி மன்றம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சமுதாயக்கூட வளாகத்தில் நடைபெற்றது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நடைபெற்ற இந்த சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முரளி தலைமை தாங்கினார்.

எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தங்கம் முரளி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் பெரியபாளையம் வட்டார அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையின் டாக்டர் பிரபாகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, நித்யா மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தினர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா