அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கல்!

அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கல்!
X

செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

பொன்னேரியில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்றார்.

திமுக ஆட்சியில் பொய்மை தலைவிரித்தாடுகிறது என்று பொன்னேரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அதிமுக சார்பில் கழக உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் திமுகவின் ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஆட்சியில் பொய்மை தலைவிரித்து ஆடுகிறது, அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் என்பது போல திரும்பத் திரும்ப பொய் பேசினால் மக்கள் நம்பி விடுவார்கள் என்பது தான் ஸ்டாலின், உதயநிதியின் கொள்கை என்றார்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மதுவினால் அதிக மரணம் ஏற்படக்கூடிய மாநிலம் திமுக ஆட்சி நடைபெறும் தமிழ்நாடு. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமலும் பெண் போலீசின் கற்புக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் ஆகவும் தமிழ்நாடு உள்ளது என்றார். போதைப் பொருளை விற்பது திமுகவினர்தான், கள்ள மதுவை அருவி போல் பரவ விட்டு இளைய சமுதாயத்தை அழிப்பதும் திமுக தான் என்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அறிவிப்பு வருமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் அற்புதமான அறிவிப்புகள் வரும், மக்கள் விரும்பக்கூடிய அற்புதமான மதுவிலக்கு கொள்கை இருக்கும் என பதில் அளித்தார். கட்சியில் உறுப்பினர்கள் வெளியேறியதாக என்ற கேள்விக்கு எம்ஜிஆரை விரும்பும் தொண்டர்கள் யாரும் கட்சியிலிருந்து வெளியே செல்லவில்லை எனவும் பெண்களின் வாக்குகளை அதிகமாக பெற அறிவித்ததாகவும் பொன்னையன் பதில் அளித்தார்.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி