உலக கைம்பெண்கள் தின பயிற்சி கூட்டம்!

உலக கைம்பெண்கள் தின பயிற்சி கூட்டம்!
X
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு நந்தியம்பாக்கம் ஊராட்சியில் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கூட்டம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன் தலைமை வகித்தார்.

சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் எம்.வி. ஜேக்கப்,அருட்செல்வி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பெண்களுக்கு சுயமாகவும், தன்னிச்சையாக வாழ்வதற்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தொழில் முனைவோர்க்கு தகுந்த பயிற்சிகளும், நல திட்ட உதவிகளை வழங்கினர்,இதில் கிராம நிர்வாக அதிகாரிவெங்கடேசன், ஜெயந்தி, ஜோதிபாசு, செல்வி ,ஹாஜா மொய்தீன் ,தனசேகர், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai ethics in healthcare