/* */

பழவேற்காடு அருகே பழங்குடியின மக்கள் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டம்

தனியார் கல்லூரி பெயரில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தல்

HIGHLIGHTS

பழவேற்காடு அருகே பழங்குடியின மக்கள் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டம்
X

பழவேற்காடு அருகே பழங்குடியின மக்கள் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டம்

பழவேற்காடு அருகே பழங்குடியின மக்கள் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டத்தில் தனியார் கல்லூரி பெயரில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த மதுரா கள்ளுக்கடைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் இறால் மற்றும் மீன் பிடித்தும் கூலி தொழில் செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் கிராம நத்தம் வகைபாட்டில் உள்ள 3.80ஏக்கர் அரசு நிலம் தனியார் கல்லுாரி பெயரில் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பழங்குடின மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று தனியார் கல்லூரியால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் கல்லுாரி பெயரில் உள்ள நிலத்தை ரத்து செய்து, கிராம நத்தம் வகைபாட்டில் உள்ள அரசு நிலத்தினை வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் வலியுறுத்தினர். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகரித்துள்ள நிலையில் வீடில்லாமல் மரத்தடியிலும், சாலையிலும் சமையல் செய்து, அங்கேயே தூங்க வேண்டிய நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பழங்குடியின மக்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Updated On: 26 April 2022 5:00 AM GMT

Related News