பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமான சமரச கூட்டம்

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமான சமரச கூட்டம்
X

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமானம் குறித்து சமரச கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் கம்பெனி கட்டுமானம் குறித்து சமரச கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஊராட்சியில் அடங்கிய குருவிமேடு பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இதில் வல்லூர், பட்டமந்திரி கிராம பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டு கடந்த 5ம் தேதி கம்பெனியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைவாய்ப்பு சம்பந்தமாக நேற்று பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியன் ஆயில் நிர்வாகிகள் வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார், துணைத் தலைவர் இலக்கியாராயல்,கொண்டக்கரை ஜெயபிரகாஷ் மற்றும் கிராம நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு அதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த நிறுவனக்காரர்களிடம் வரவழைத்து அவர்களிடம் எந்தெந்த பணிகள் காலியாக உள்ளது என முடிவு செய்யப்பட்டு அவர்களின் அறிவுருத்தலின்படி ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!