காமராஜர் துறைமுகத்தில் ரூ.21 கோடி மதிப்பு திட்டங்கள் திறப்பு

காமராஜர் துறைமுகத்தில் ரூ.21 கோடி மதிப்பு திட்டங்கள் திறப்பு
X

காமராஜர் துறைமுகத்தில் ரூ.21 கோடி மதிப்பிலான திட்டங்களை நீர்வழிப் போக்குவரத்து சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் திறந்து வைத்தார்.

Water Transport Ship -காமராஜர் துறைமுகத்தில் ரூ.21 கோடி மதிப்பிலான திட்டங்களை நீர்வழிப் போக்குவரத்து சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் திறந்து வைத்தார்.

Water Transport Ship -பொன்னேரி அருகே எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 300கி.வாட் சூரிய மின் திட்டம், இருவழி கான்கிரீட் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் திறந்து வைத்தார்.

ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் முனையங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது துறைமுகத்தில் 21கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 300கி.வாட் சூரிய மின் திட்டம், இருவழி கான்கிரீட் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறைமுக தலைவர் சுனில் பாலிவாலிடம் கேட்டறிந்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
செலவுகளை குறைத்து இலாபத்தை அதிகரிக்க செய்யும் AI Business பற்றி  நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!